
அல்வா என்பது தெற்காசிய மக்களிடையே, குறிப்பாக இந்தியாவில் மிகவும் பொதுவான இனிப்பு உணவாகும். ஒரு சுவையான பழுத்த வாழைப்பழ அல்வா செய்முறையை உங்கள் நாக்குக்கு சிகிச்சையளிக்கவும். உதடு சுவைக்கும் இனிப்புக்கான விரைவான மற்றும் எளிதான அல்வா செய்முறையைச் செய்துபாருங்கள்.
எப்படி செய்வது என்று பார்க்கலாம்,
வாழைப்பழம்- 5
டால்டா -50கிராம்
ஏலக்காய் தூள் -1தேக்கரண்டி
பனைவெல்லம் – தேவையான அளவு
சக்கரை-1கப்
நெய்-1/4 தேக்கரண்டி
முந்திரி- 5
பாதம்-5
திராச்சை-5
தண்ணீர் – 1/4கப்
*முதலில் ஒரு பேனில் நெய் தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு நாண்ஸ்டிக் பேனில் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றிச் சூடானதும், அதில் அரைத்த அல்லது மசித்த
வாழைப்பழத்தை சேர்த்து கிளறி, பனைவெல்லத்தை சேர்த்து நன்கு வெந்து ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி
விட வேண்டும்.
* அதே வேளையில் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் சர்க்கரை மற்றும் 1/4 கப் நீரை ஊற்றிக் கிளறி கொதிக்க வைக்க
வேண்டும். சர்க்கரை பாகானது கேரமல் நிலைக்கு/ப்ரௌன் நிறத்தில் மாறி வரும்போது, அதில்
வாழைப்பழத்தை சேர்த்து கிளறி தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
* அப்போது அதில் தேவையான அளவு நெய் ஊற்றிக் கிளறி விட வேண்டும்.
* அதே வேளையில், ஒரு வாணலியை மற்றொரு அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றிச் சூடானதும், பாதாம்,
முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வறுத்து அல்வாவில் ஊற்றிக் கிளறி, அத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதை இறக்கி, நெய் தடவிய பேனில் ஊற்றிப் பரப்பி, குளிர வைத்து, பின் அதைத் துண்டுகளாக்கினால்,
சுவையான வாழைப்பழ அல்வா தயார்.



