
கச்சா எண்ணெய் கடத்தலில் வெனிசுலா கப்பல் நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
உலகின் மிகப்பெரியக் கச்சா எண்ணெய் தாயகமாக வெனிசுலா உள்ள நிலையில், கரீபியன் கடற்பகுதி வழியாக அவ்வப்போது ஈரானுக்கு கச்சா எண்ணெய் கடத்தி செல்லப்படுகிறது. இதன்மூலம், அங்குள்ள பயங்கரவாதிகள் வருவாய் ஈட்ட உதவுவதாக வெனிசுலா மீது அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது.
இதனால், 2022 ஆம் ஆண்டு ஈரானுக்கு கச்சா எண்ணெய் கடத்தி செல்ல அமெரிக்கா தடை விதித்தது. இதனை, மீறி வெனிசுலாவில் இருந்து ஈரானுக்கு கச்சா எண்ணெய் கப்பல் மூலம் சென்று கொண்டிருந்தப் போது, அமெரிக்க கடற்படையினர் சிறைபிடித்தனர்.
இந்நிலையில் கச்சா எண்ணெய் கடத்தலுக்கு உதவிய வெனிசுலா அரசுக்கு சொந்தமானக் கப்பல் நிறுவனம் மற்றும் 6 கப்பல்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.


