கஞ்சாவினால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு.!

ஊர்ப்புறங்களில் கஞ்சாவும் பணக்காரர்களிடையே உயர் இரகப் போதைப் பொருட்களும் புழக்கத்தில் உள்ளதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது எனப் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியத்தில் பாஜக மாவட்டத் தலைவர் பிரவீன்குமார் தலைமையில் நயினார் நாகேந்திரன் பரப்புரைப் பயணம் நடபெற்றது.

அப்போது பேசிய நாகேந்திரன், திமுக ஆட்சியில் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் கஞ்சா, மெத்தம்பெட்டமைன் விற்கப்படுவதாகத் தெரிவித்தார்.

ஊர்ப்புறங்களில் கஞ்சாவும் பணக்காரர்களிடையே உயர் இரகப் போதைப் பொருட்களும் புழக்கத்தில் உள்ளதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *