Advertisements

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் பிராந்தியத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
ஈரானிய அதிபர் மசூத் பெசஸ்கியான், பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது, மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுக்கவும், பிராந்திய பாதுகாப்பு குறித்தும் சுவிட்சர்லாந்தில் நடைப்பெற்ற லூசெர்ன் ஏரி உச்சி மாநாட்டில் அமெரிக்கா-ஈரான் இடையே கையெழுத்தான இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இரு நாடுகளும் 60 நாட்களில் இறுதி ஒப்பந்தத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
பின்னர் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அதிபர் பெசஸ்கியானுடன் இணைந்து நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் ஷெரீப், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் பிராந்தியத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Advertisements


