அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் – செப். 15-ல் தொடக்கம்!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதலமைச்சர் விஜய் முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
முதலமைச்சர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் அன்று தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் அமலுக்கு வந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தை, முறைப்படி வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். மேலும், இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 755 கோடியே 83 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
thaimamanthangamothiram-cmvijay-tamilnadu-government-newscheme-vijay

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *