Panchayat Member: ஓட ஓட வெட்டிக்கொலை!

Advertisements

Panchayat Member | Murder | Tirunelveli

நெல்லையில் பஞ்சாயத்து உறுப்பினர் ஓட ஓட வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

நெல்லை: நெல்லை மாவட்டம் கீழநத்தம் வடக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது 32). இவருக்குக் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடிந்துள்ளது. ராஜாமணி கீழந்த்தம் பஞ்சாயத்து உறுப்பினராகவும் உள்ளார். இந்நிலையில், ராஜாமணி இன்று வழக்கம்போல் வீட்டில் உள்ள ஆடுகளை அருகில் உள்ள வாய்க்கால் பாலம் பகுதியில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர், மாலை ஆடுகளை வீட்டிற்கு கொண்டு செல்லும் வழியில் ராஜாமணியை இடைமறித்த கும்பல் அவரை ஓட ஓடச் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளது.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ராஜாமணி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், ராஜாமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பஞ்சாயத்து உறுப்பினரை வெட்டிக்கொன்ற கும்பல் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜாமணியின் ஆடுகளைத் திருடச்சென்ற இடத்தில் தகராறு ஏற்பட்டு இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே ராஜாமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள சாலையில் திரண்டு நேற்று இரவு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு, அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராஜாமணி உடலை வாங்க மறுத்து இன்று 2-வது நாளாக அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *