
வெனிசுலா கடற்பகுதியில் மற்றொரு எண்ணெய்க் கப்பலை அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்துக் கைப்பற்றியுள்ளன.
வெனிசுலாவுக்கு எண்ணெய்க் கப்பல்கள் செல்வதற்கும், அங்கிருந்து வெளிநாடுகளுக்குப் புறப்பட்டுச் செல்வதற்கும் தடை விதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
கரீபியன் கடற்பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தலைத் தடுப்பதாகக் கூறிக்கொண்டு அங்குத் தனது கடற்படையை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி இதுவரை நூறு பேரைச் சுட்டுக்கொன்றுள்ளது.
ஏற்கெனவே ஒரு வாரத்துக்கு முன் வெனிசுலாவின் மிகப்பெரிய எண்ணெய்க் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்தது. இந்நிலையில் நேற்று மற்றொரு கப்பலைப் பறிமுதல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது

