Advertisements

கிளஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பிந்தியாராணி தேவி சொரோகைபாமுக்குப் பிரதமர் நரேந்திர மோடி தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பழுதூக்குதலில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கிளஸ்கோ காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான 58 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பிந்தியாராணி தேவி சொரோகைபாமைக் குறித்துப் பெருமை கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த வெற்றி, அவரது கடின உழைப்பிற்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த சான்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அவரது எதிர்கால முயற்சிகளுக்குத் தனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Advertisements




