
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற கனிமா பாடல் வெளியானதிலிருந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் அவரது இசையினால் அனைவரையும் கவர வைத்திருப்பார் . இப்படத்தில் இடம்பெற்ற வரிகளும் துள்ளலாக இருக்கின்றனர். பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகள் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. இந்நிலையில், இப்பாட்டின் சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. ஆர்வத்துடன் ரசிகர்களும் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கு முன்னாள் இதே படத்தில் இருந்து “கண்ணாடி பூவே நீ தாண்டி ” இந்த பாடலும் னால வரவேற்பை பெற்றது. தற்போது ரெட்ரோ படத்தில் இடம்பெற்றிருக்கும் கனிமா பாடல் சமூக வலைத்தளங்கள், திருமணவிழாக்கள் ,பொதுவெளிகள் என அனைத்திலும் பகிரப்பட்டு வருகிறது .இப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் ஜோஜூ சார்ஜ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். குறிப்பாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா, மகான், பேட்ட படங்கள் எல்லாமே கேங்ஸ்டர் கதையாகவே உருவாகியிருக்கிறது. கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமும் அதேபாணியில் வெளிவந்து மெகாஹிட் அடைந்தது. சமீபத்தில் வெளியான ரெட்ரோ படத்தின் டீசரும் கேங்ஸ்டர் பற்றிய படமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் அளித்த பேட்டியில், நான் இயக்கும் படங்கள் எல்லாமே கேங்ஸ்டர் படம் என்றே முத்திரை குத்துகின்றனர். ஆனால் ரெட்ரோ அதுமாதிரியான படம் இல்லை. முழுக்க முழுக்க காதல் படம் என விளக்கம் அளித்தார். ரசிகர்கள் கண்டிப்பாக இப்படத்தை ரசிப்பார்கள் என தெரிவித்தார். ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற கண்ணாடி பூவே பாடல் சமீபத்தில் வெளியாகி திரை ரசிகர்களை காதலில் உருக வைத்தது. ஜெயிலில் இருக்கும் சூர்யா காதலியை நினைத்து வாடுவது போன்று பாடம் இடம்பிடித்திருக்கிறது.இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் இடம்பெற்ற மாமதுரை பாட்டு பட்டிதொட்டியெங்கும் கலக்கியது. மதுரை மண்வாசனை அப்பாட்டில் வீசியது என்றே கூறலாம். அந்த அளவிற்கு துள்ளலாகவும் இருந்தன. கனிமா வைரல்: தற்போது தமிழ் ரசிகர்களை கனிமா பீவர் பிடித்திருக்கிறது என்றே கூறலாம். சமீபத்தில் வெளியான ரெட்ரோ படத்தின் 2வது பாடல் கனிமா ரொம்ப துள்ளலாக வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது. பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகளில் ரசிகர்கள் சொக்கி கிடக்கின்றனர்.
எந்தப்பக்கம் திரும்பினாலும் கனிமா பீவர் தான் ஆட்டிப்படைக்கிறது. இதனிடையே, சூர்யாவுக்கு தமிழை தாண்டி கேரளாவிலும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். கனிமா பாட்டிற்கு பேருந்துக்குள் குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோதான் வைரலாகி வருகிறது. மஜாவாக ஜாலி பன்றாங்கப்பா என்றே ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். முன்னதாக அயன் படத்தில் இடம்பெற்ற பளபளக்குற பகலா நீ பாடலை ரீ கிரியேட் செய்து ஆட்டம் போட்டது குறிப்பிடத்தக்கது.இந்த வகையில் இந்த படத்தின் பாடல்கள் னால வரவேற்பை பெற்று வருவதினால் இந்த [படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது,
