
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்தது. இதில், ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து. முதல் இன்னிங்சில் 371 ரன்கள் எடுத்தது. இதன்பின், இங்கிலாந்து அணி 286 ரன்கள் மட்டுமே எடுத்தன.
இதையடுத்து, இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 349 ரன்களை குவித்தது. பின்னர், 435 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 352 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

