நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம் – அரசு அறிவிப்பு!

Advertisements

முதலமைச்சர் அறை நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அலுவலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது தளத்திற்கு மாற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, முதலமைச்சர், முதலமைச்சரின் செயலாளர்கள், ஆலோசகர்களின் அறை 10ஆவது மாடிக்கு மாறுகிறது என்றும், 10ஆவது மாடியில் உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையின் பல்வேறு பிரிவுகள் கலைவாணர் அரங்கிற்கு மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பிரதான கட்டிடத்தில் நிலவும் கடுமையான இடப் பற்றாக்குறை காரணமாக இந்த மாறுதல் நடைபெறுவதாகத் தெரிவித்துள்ளது. ஆனால் அரசியல் வட்டாரத்தில், தற்போதைய அறை வாஸ்துபடி இல்லை என்றும், ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க உயரமான இடத்தில் அமர வேண்டும் என்ற ஜோதிடரின் ஆலோசனையும் இதற்குக் காரணம் எனவும் பரவலாகப் பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *