மக்களுடன் இணைந்து சித்தாரே சமீன் பார் படத்தை பார்த்த அமீர் கான்

Advertisements

பாலிவுட் திரைப்பட நடிகர் அமீர் கான் குஜராத்தின் கச் மாவட்டத்தில் சிற்றூர் மக்களுடன் இணைந்து சித்தாரே சமீன் பார் திரைப்படத்தைக் கண்டுகளித்துள்ளார்.

அமீர்கான், ஜெனிலியா நடித்த சித்தாரே சமீன் பார் திரைப்படம் ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் படம் கடைக்கோடிச் சிற்றூருக்குச் சென்றடைந்துள்ளதா என்பதைக் கண்டறியும் வகையில் பாலிவுட் நடிகர் அமீர்கான் குஜராத்தின் கச் மாவட்டத்தின் கோட்டை என்னும் ஊருக்குச் சென்றிருந்தார்.

அங்கு ஊருக்குப் பொதுவிடத்தில் பெரிய திரையில் ஊர்மக்களுடன் சேர்ந்து திரைப்படத்தைக் கண்டுகளித்தார். அப்போது பேசிய அமீர்கான், கோட்டை என்னும் அந்த ஊரில் 2001ஆம் ஆண்டு லகான் படப்பிடிப்பில் தான் கலந்துகொண்டதை அவர் நினைவுகூர்ந்தார்.சித்தாரே சமீன் பார் திரைப்படத்தில் சமூகத்துக்குத் தேவையான நல்ல கருத்துக்கள் உள்ளதாகவும் அமீர்கான் தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *