புதுச்சேரிக்கு தனி மாநிலத் தகுதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தல்..!

Advertisements

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கையை அக்கட்சியின் தலைவரும், மாநில முதலமைச்சருமான ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

பின்னர் நிர்வாகிகளிடையே பேசிய ரங்கசாமி, புதுச்சேரியில் முத்தான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்தார். வேலை வாய்ப்பு வழங்குவதாலும், நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதாலும் மீண்டும் 2026ஆம் ஆண்டு தமது கட்சி ஆட்சி அமைக்கும் என்று  அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இப்போது எந்தத் திட்டமாக இருந்தாலும் ஆளுநரிடம் ஒப்புதல் பெற வேண்டிய நிலை உள்ளதாகக் கூறிய அவர், இதனால் தனி மாநிலத் தகுதி கிடைக்க வேண்டும் என்று  வலியுறுத்தினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *