திமுக தயவில்தான் தவெக ஆட்சி பிடித்துள்ளது : உதயநிதி விமர்சனம்..!

Advertisements

திமுகவின் தயவில்தான் தவெக ஆட்சியை பிடித்துள்ளதாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர்  உதயநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர்  உதயநிதி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், 2026 சட்டப்பேரவை தோ்தலில் நமது எதிரி யாா் எனத் தெரியாமல் இருந்தோம் என்றும்,  தற்போது, எதிரி யாா் எனத் தெரிந்துவிட்டது
ஆகையால், மீண்டும் வெற்றி வாய்ப்பை இழக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார். திமுகவின் தோல்விக்குப் பல்வேறு காரணங்களைச் சொல்லி, நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ளலாம், ஆனால் கொளத்தூா் தோல்வியை மறக்கக் கூடாது என்று கூறினார். திமுகவினா் அதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டுள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தவெகவின் வெற்றியே ஒரு விபத்துதான் என்றும் திமுகவின் தயவில்தான் தவெக ஆட்சியை பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த கட்சிகளே தற்போது தவெகவுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதாக விமர்சித்தார். பேரவையில் எதிா்க்கட்சிகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல இயலாத அமைச்சா்கள், அதை மடைமாற்றம் செய்யும் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், முதல்முறையாக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிப்பரப்பு செய்தது, திமுக ஆட்சியின்தான் என்று தெரிவித்தார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *