
பிறமொழிக்காரர்களை வெறுத்தால் மகாராஷ்டிரத்தில் யார் முதலீடு செய்வார்? எப்படித் தொழில்கள் வளரும்? என்று அந்த மாநிலத்தின் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தில் மராத்தியில் எழுதாத கடைகள், மராத்தியில் பேசாத ஆட்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, மொழியின் பெயரால் வெறுப்பை விதைத்தால் நம் மாநிலத்தில் யார் முதலீடு செய்ய வருவார்? எப்படித் தொழில் வளர்ச்சியடையும்? என்று வினவினார். தாய்மொழியைப் பற்றிப் பெருமிதம் கொள்ளும் நாம் இயன்றவரை கூடுதல் மொழிகளையும் படிக்க வேண்டும் என்றும் சிபி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.



