பல்கலைக்கழகங்கள் தி.மு.க ஆட்சியில் சிறப்பாக செயல்படுகிறது – ஸ்டாலின்

Advertisements

ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைகழகம் தி.மு.க., ஆட்சியில் தான் மிகச் சிறப்பாக செயல்படுகிறது – ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் முத்தமிழ் பேரவை சார்பில், இயல், இசை, நடனக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில், கலைஞர் பெயரிலான விருதை, நடிகர் நாசருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதை தொடர்ந்து, இயல், இசை, நாட்டியம் உட்பட ஐந்து பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் எட்டு கலைஞர்களுக்கு, விருதுகள் வழங்கப்பட்டன.

இதை யடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, அடுத்த ஆண்டும் தான் முதல்வராக வந்து, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்’ என, நடிகர் நாசர் கூறியதாகவும் முதல்வராக வருகிறேனோ இல்லையோ, முதல் ஆளாக வருவதாகக் கூறினார்.

இந்த பேரவை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது என்றும் இந்த அமைப்பு நடத்தும் விழாவில் பங்கேற்பதில் தனக்கு பெருமை என்று குறிப்பிட்டார். இதை தொடர்ந்து, தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைகழகம், திமுக ஆட்சியில் தான் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

மேலும், விருதுப் பெற்றவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்து,எதிர்கால இளைஞர்களை வளர்க்க, கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகள் மிக முக்கிமானவை என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *