ஒடிசா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகன்நாதர் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.!

Advertisements

ஒடிசா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகன்நாதர் தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. பூரியில் ஜெகன்நாதர், பாலபத்திரர், சுபத்திரா தேவி ஆகிய மூவரின் உருவங்கள் இடம்பெற்ற தேர்களின் ஓட்டம் நேற்றுத் தொடங்கியது.

 

கஜபதி மன்னர் இந்தத் தேரோட்டத்தைத் தொடக்கி வைத்தார். இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ள இந்தத் திருவிழாவில் காவல்துறையினர், பேரிடர் மீட்புப் படையினர், தன்னார்வலர்கள் எனப் பல்லாயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்றுப் புறப்பட்ட மூன்று தேர்களும் இன்றும் பூரி நகர வீதிகளில் உலா வந்தன.

 

தேரிலிருக்கும் சுவாமிகளுக்கு இன்று காலையில் தீபாராதனை காட்டப்பட்டது. தேரோட்டத்தில் ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜியும் அமைச்சர்களும் கலந்துகொண்டனர். புகழ்பெற்ற இந்தத் தேரோட்டத்தைக் கிர்கிஸ்தான் நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் கண்டுகளித்தனர்.

 

பூரி ஜெகன்நாதர் தேரோட்டத்தையொட்டி உலகப் புகழ்பெற்ற மணல்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பூரிக் கடற்கரையில் வடிவமைத்துள்ள மணல் சிற்பம் காண்போதைக் கவர்ந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *