நடிகை நயன்தாரா vs தனுஷ் விவகாரம் – நடிகர் சூரி !

Advertisements

நடிகை நயன்தாரா மற்றும் தனுஷூக்கு இடையிலான பிரச்சினைகள்குறித்த கேள்விக்குப் பதிலளிக்காமல் நடிகர் சூரி நழுவியுள்ளார்.

நடிகர் சூரி இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். கோயிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த நடிகர் சூரியுடன் கோவில் கடற்கரை பணியாளர்கள், பாதுகாவலர்கள், பக்தர்கள், பொதுமக்கள் நின்று செல்ஃபி புகைப்படம் எடுத்தும், கைக்கொடுத்தும் மகிழ்ந்தனர்.

முன்னதாகக் கோவிலிலிருந்து வெளியே வந்த நடிகர் சூரியிடம் சிறுவன் ஒருவன் நீங்கள் நடித்த டான் திரைப்படத்தைப் பலமுறை பார்த்தாகக் கூறினார். அதற்குப் பதிலளித்த நடிகர் சூரி படத்தை மட்டும் பலமுறை பார்த்தால் போதாது. பாடத்தையும் பலமுறை படிக்க வேண்டும். தாய் தந்தை சொல்வதை கேட்டு நடக்க வேண்டும் என அறிவுரை கூறினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், “டிசம்பர் 20 ஆம் தேதி நான் நடித்த ’விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. நேற்றைய தினம் அதன் முதல் பாடல் வெளியாகி உள்ளது. அந்தப் பாடல் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. உலகத்தின் தலைசிறந்த மனிதர்களில் ஒருவர் இளையராஜா. அவர் எழுதியுள்ள பாடல்கள் தற்போதும் உள்ள சந்ததிகள் கேட்கும் வண்ணம் உள்ளது. நானும் அவரது காலத்தில் நடிகராக இருப்பதை பாக்கியமாக நினைக்கிறேன். அவரது பாடல்கள் வாழ்வியலை உண்மைகளைப் பிரதிபலிக்கும்.

இளையராஜா அவர்கள் ஒரு புத்தகம். எனக்குக் காமெடியானாவும், ஹீரோவாகவும் வாய்ப்பு கொடுத்தது மக்கள் தான். தற்போது ’விலங்கு’ வெப்சீரியஸ் எடுத்த இயக்குநர் பிரசாந்த் அவர்களின் படத்தில் நடிக்க உள்ளேன். அதைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து வெற்றிமாறனின் புதிய படத்திற்கும் ஒரு வாய்ப்பு வந்துள்ளது. அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும்.

நடிகர் சூர்யா நடித்த  திரைப்படம் அருமையாக உள்ளது. நன்றாக இல்லை என்பது ஒரு சிலரின் கருத்து. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான படமாகத்தான் நான் இதைப் பார்க்கிறேன்” என்றார்.

நடிகர்கள் நயன்தாரா மற்றும் தனுஷ் பிரச்சனைகுறித்து கேட்டதற்கு அது தனக்கு தெரியாது என்றும், தெரிந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை என்று கூறி அங்கிருந்து கிளம்பினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *