யுஏஇ அதிபருடன் பிரதமா் மோடி பேச்சு : தாக்குதலுக்கு கண்டனம்.!

Advertisements

போர் பதற்றமான சூழலில் ஐக்கிய அரபு அமிரகத்துடன் இந்தியா  துணை நிற்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதில் ஈரான் உச்ச தலைவர் காமேனி உயிர் மாய்க்கம் செய்யப்பட்டார். இதற்கு பதிலடியாக,  கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரக அதிபா் ஷேக் முகமது பின் ஸயதிடம் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அப்போது, யுஇஏ மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கலைத் தெரிவித்தாா்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி தனது சமூக வலைத்தளப் பதிவில், இந்தக் கடினமான சூழலில் ஐக்கிய அரபு அமிரகத்துடன் இந்தியா துணை நிற்கும் என்றும் அங்கு வசிக்கும் இந்தியா்களுக்கு பாதுகாப்பு அளித்து வருவதற்கு நன்றியைத் தெரிவித்தார். இதையடுத்து, மோதலை கைவிட்டு, பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த இந்தியா எப்போதும் ஆதரவு அளிக்கும் என்று கூறினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *