டெங்குவால் 3 பேர் உயிரிழப்பு!

புதுடில்லி:

இந்தாண்டில் தற்போது வரை, டில்லியில் 4,533 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது; 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

2023ம் ஆண்டு டில்லியில் 9,266 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது மற்றும் 19 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு (2024) இதுவரை 4,533 டெங்கு பாதிப்பு மற்றும் 3 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

2024 துவக்கத்திலிருந்து டில்லியில் 4,533 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் இம்மாதம் மட்டும் 472 பேருக்கும், கடந்த அக்டோபரில் அதிகபட்சமாக 2,431 பேருக்கும் டெங்கு பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் டில்லியின் நஜப்கார், தெற்கு டில்லி, ஷாத்தரா (வடக்கு), கரோல் பா மற்றும் மத்திய டில்லி ஆகிய பகுதிகளில் அதிக டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *