
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபையின் தற்போதைய பதவிக்காலம் வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.
மொத்தம் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்படுகிறது.
70 தொகுதிகளிலும் மொத்தம் 699 பேர் போட்டியில் உள்ளனர்.
இதில் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நடக்கிறது.
இந்நிலையில் டெல்லி சட்டசபைக்கான வாக்குப்பதிவு காலைத் தொடங்கியது.
பொதுமக்கள் அனைவரும் ஆர்வமுடன் தங்கள் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.
டெல்லி சட்டசபை தேர்தலில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது வாக்கினை பதிவு செய்தார்.
குடும்பத்தினருடன் சென்று அவர் தனது வாக்கினை பதிவு செய்தார்.
வாக்கு செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் காலையிலேயே வாக்களிக்கும் வழக்கம் கொண்டுள்ளேன்.
மக்கள் மாற்றத்திற்கான மனநிலையில் இருப்பதாக நான் நினைக்கிறேன் என்று அவர் கூறினார்.
