உக்ரைனுக்கு வட்டியில்லா கடன்..ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்.!

Advertisements

உக்ரைனுக்கு ஒன்பதாயிரம் கோடி யூரோக்கள் கடனாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புக்கொண்டுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே மூன்றாண்டுகளாகப் போர் நீடித்து வருகிறது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ள ரஷ்ய நிறுவனங்களின் சொத்துக்கள் 20 ஆயிரம் கோடி யூரோக்கள் மதிப்புக்கு முடக்கப்பட்டுள்ளன.

இந்தச் சொத்துக்களில் இருந்து உக்ரைனுக்குக் கடன் வழங்குவது குறித்துப் பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் விரிவாகப் பேசினர்.

அதன் இறுதியில் முடக்கப்பட்ட ரஷ்யச் சொத்துக்களில் இருந்து உக்ரைனுக்குக் கடன் வழங்கப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளன. அதேநேரத்தில் உக்ரைனின் மறு கட்டமைப்புக்கு ஒன்பதாயிரம் கோடி யூரோக்கள் கடன் வழங்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *