ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப் ஆந்திராவில் செமிகண்டக்டர் ஆலைகள்!

ஒடிசா, பஞ்சாப், ஆந்திர மாநிலங்களில் 4600 கோடி ரூபாய் மதிப்பீடில் நான்கு செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலைகளைத் தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
அமைச்சரவை முடிவுகள்குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அதில் ஒடிசா, பஞ்சாப், ஆந்திர மாநிலங்களில் 4600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு செமிகண்டக்டர் ஆலைகளைத் தொடங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.. இந்த ஆலைகளைத் தொடங்குவதன்மூலம் இரண்டாயிரம் திறன்மிகு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும், துணைத் தொழில்கள்மூலம் மறைமுக வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *