‘இது கடல்சார் கொள்ளை’ – அமெரிக்காவை விளாசிய ஈரான்!

ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில், இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய மாலுமிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியதாகத் தகவல் வெளியான நிலையில், இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக, இந்தத் தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இது குறித்துப் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேயி, இந்தியக் கப்பல்கள் மீதான இந்தத் தாக்குதல், அமெரிக்காவின் அரசு ஆதரவிலான கடல்சார் கொள்ளைக்குச் சான்றாகும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த மாலுமிகளின் குடும்பத்தினருக்கு ஈரான் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், சர்வதேச சமூகம் அமெரிக்காவின் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தட்டிக்கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *