Advertisements

சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. இதனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, அவர் அனைத்துலக வள்ளலார் மாநாட்டை தொடங்கி வைத்து விழாவில் உரையாற்றினார்.
அப்போது, பேசிய அவர் உலகிற்கே தனிப்பெருங்கருணை என்ற அன்பு வழியைப் போதித்தவர் வள்ளலார் என்றும், இத்தகைய வள்ளலாரை போற்ற வேண்டியது தமிழ் சமூகத்தின் கடமை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, அனைத்துலக வள்ளலார் மாநாட்டை குறிக்கும் விதமாக நினைவுத்தூண், அன்னதானக் கூடங்கள், மூலிகைத் தோட்டம் உள்ளிட்டவைகள் அமைக்கப்படவுள்ளது. மேலும், குறிப்பாக தலைநகர் சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
–
Advertisements


