
மிகவும் குறைந்த கட்டணத்தில் விமானப் போக்குவரத்தை வழங்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது செயல்பாட்டை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மிகக் குறைந்த கட்டணத்தில் விமானப் போக்குவரத்துச் சேவையை வழங்கி வந்தது.
இந்நிலையில் மேற்காசியாவில் உள்ள போர்ச்சூழலில் எரிபொருள் விலை உயர்வாலும், கடும் நிதி நெருக்கடியாலும் தனது செயல்பாட்டை உடனடியாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.
தங்கள் அனைத்து விமானச் சேவைகளும் ரத்துச செய்யப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர் சேவையும் விரைவில் நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனத்தின் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 34ஆண்டுகளாகப் பெருமிதத்துடன் மிகக் குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை வழங்கி வந்த நிறுவனம் இத்தகைய முடிவை எடுப்பதில் வருத்தமடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிறுவனம் மூடப்படுவதால் 17 ஆயிரம் ஊழியர்கள் வேலை இழப்பதுடன், இந்த விமானச் சேவையுடன் சார்ந்துள்ள ஒப்பந்தக்காரர்கள், ஊழியர்கள் என மேலும் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.




