ஹைட்ரஜன் ரயில் விரைவில் தொடக்கம் !

Advertisements

Video👇👇

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்வீடியோ வெளியிட்ட அமைச்சர் | Live Tamil News | Gem News

 

ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்ட முதல் ரயில் விரைவில் ஓடத் தொடங்க உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.எக்ஸ்தளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலின் வீடியோவை வெளியிட்டுள்ளார். ஹைட்ரஜனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் இந்த ரயில் நூறு விழுக்காடு மாசில்லாப் போக்குவரத்து வசதியாக இருக்கும் என்றும் அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் என்கிற கொள்கையின் அடிப்படையில் இந்த ரயில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *