கரூர் வழக்கில் இருந்து தப்பிக்க தான் டெல்லி போனீங்களா.? – ஸ்டாலின் கேள்வி.!

“திமுக மகளிரணி கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், தவெக அரசின் செயல்பாடுகளை மிகவும் கடுமையாகச் சாடியுள்ளார். தவெக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், மக்கள் இந்த ஆட்சியைத் தேர்ந்தெடுத்ததற்காக வருந்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பாஜகவின் ‘ஜெராக்ஸ்’ போல செயல்படுவதாகவும், கரூர் சிபிஐ வழக்கில் இருந்து தப்பிக்கவே அவர் டெல்லி சென்றதாகவும் ஸ்டாலின் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார்.

ஆட்சி நிர்வாகத்தைக் கேலிக்கூத்தாக்கும் தவெக அரசின் தோல்விகளை, பொறுப்பான எதிர்க்கட்சியாக இருந்து மக்கள் மன்றத்தில் எடுத்துரைப்போம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.”அவர் என்ன பேசினார்.. அங்கு நடந்தது என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்..!

சென்னையில் திமுக மகளிரணி கூட்டம் நடைபெற்றத.. அந்த கூட்டத்தில் பேசிய மு.க ஸ்டாலின் , “திமுக பெற்ற வாக்குகளுக்கு மகளிரணியும் முக்கிய காரணம். திமுக ஆளும் கட்சியாக மாற வேண்டும் என்றால்.. இன்னும் சுறுசுறுப்பாக வேகமாக செயல்பட வேண்டும். நான் பேசியதை திரித்துக்கூறி, ஆட்சியை கவிழ்க்க சதியா என்று சிலர் அழுகின்றனர். தவெக ஆட்சியின் தோல்விகளை தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம். அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் மக்களே இந்த ஆட்சியை அகற்றுவார்கள்.

திமுக ஆட்சியில் மக்களுக்கு பார்த்து பார்த்து திட்டங்களை செய்து கொடுத்தோம். தவெக ஆட்சியில் நாள்தோறும் குற்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் தவெக ஆட்சியை மக்கள் கவிழ்ப்பார்கள். தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என்று மக்கள் வருந்துகிறார்கள். ஆளும் கட்சியை சேர்ந்த பெண்ணுக்கே பாலியல் கொடுமை நடந்துள்ளது. பெண்களுக்கு எதிரான பெரும்பாலான குற்றங்களில் தவெக நிர்வாகிகள் ஈடுபடுவதாக செய்திகள் வருகின்றன.

மேலும் , அதிமுக எம்.எல்.ஏக்களை விஜய் ஷாப்பிங் செய்கிறார். விஜய் ஆட்சி மீது விஜய்க்கே நம்பிக்கை இல்லையா? தவெகவினரிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று மக்கள் கேட்கும் நிலை வந்துவிட்டது. பாஜக மற்ற மாநிலங்களில் செய்வதையே இங்கு விஜய் செய்கிறார். ஒரு மாதத்தில் கேலிக்கூத்தான, அசிங்கமான ஆட்சியாக தவெக மாறியுள்ளது. ஒரே மாதாத்தில் ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு தவெக என்ன ஆஃபர் செய்தது?கான்பிடண்டா இருங்க என்ற விஜய்யே நம்பிக்கையுடன் இல்லை.

தீர்ந்து போன சக்தி என்று சொன்ன கட்சிகளின் எம்.எல்.ஏக்களையே திருடுகிறார் விஜய். நிதி ஆயோக் கூட்டத்தில் திமுகவின் சாதனைகள், திமுக முன்வைத்த கோரிக்கைகளை விஜய் பேசியுள்ளார்.பாலியல் வன்முறை, அரிவாள் வெட்டு, பெட்ரோல் குண்டு வீட்டு நடக்கும் போது விமர்சிக்காமல் இருக்க முடியுமா? நான் நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்ற போது அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தப்பிக்க சென்றேன் என்றார் விஜய். கரூர் வழக்கில் இருந்து தப்பிக்கவே முதல்வர் விஜய் டெல்லி சென்றாரா?

பாஜகவை உறுதியாக விமர்சித்தால் ஆட்சிக்கு ஆபத்து வரும் என அமைதியாக இருக்கிறீர்களா?இது சினிமா ஆல்ல.. ஆட்சி நிர்வாகம். திமுகவின் கொள்கை விளக்க குறிப்பாகவே விஜய்யின் பேச்சு இருந்தது. பாசிசம், பாயாசம் என்று நக்கல் செய்த விஜய் தற்போது என்ன செய்துவிட்டு வந்து இருக்கிறார். மாநில உரிமை எதுவாக இருந்தாலும் திராவிட மாடல் ஆட்சி ப்ளூ பிரிண்ட் படிதான் யாரும் ஆட்சி செய்ய முடியும். தவெக ஆட்சியை நோக்கி திமுக எழுப்பும் கேள்விகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.

இறுதியாக, அரசியல் என்பது சினிமா அல்ல, அது மக்கள் நலன் சார்ந்த நிர்வாகம் என்பதைச் சுட்டிக்காட்டிய மு.க. ஸ்டாலின், தற்போதைய தவெக அரசை 6 மாதம் வரைக்கும் விமர்சிக்க மாட்டோம்.. அவர்கள் செய்யும் ஆட்சியை பொறுத்திருந்து கவனிப்போம் என்று சொல்லிவிட்டு , தற்போது ஆட்சி அமைந்த ஒரே மாதத்திலேயே கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.. மேலும் , கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு, இந்த ஆட்சி 3 மாதம் கூட தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் தான் நடந்து கொண்டிருக்கிறது என்று விமர்ச்சித்ததற்கு , திமுக கூட்டணி கட்சியினரே அது தவறு என்று சுட்டிக்காட்டினர்..என்ன தான் , தவெகவை திமுக விமர்ச்சித்தாலும் தற்போதைய முதல்வர் விஜய் அவர்கள் இதையெல்லாம் SOFT – ஆகவே , டீல் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது…

இந்நிலையில் , என்ன தான் வீர வசனங்கள் ஸ்டாலின் பேசினாலும் , தன்னுடைய சொந்த தொகுதியிலேயே வெற்றி பெற முடியாத சூழல் தவெக – வால் , நடந்துள்ளது..ஆட்சி தொடங்கி சரியாக 1 மாதமே முடிந்துள்ள நிலையில் , எதிர் கட்சிகள் முன்வைக்கும் விமர்சனம் குறித்தும் , இதற்கு ஆளும் கட்சியின் அணுகுமுறை குறித்து உங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *