
சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வ.உ.சி. சாலையில், கட்டப்பட்டுள்ள திருமண மாளிகையை, துணை முதலமைச்சர் உதயநிதி-ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வ.உ.சி. சாலையில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் திருமண மாளிகை மற்றும், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கட்டப்பட்டுள்ள மகாகவி பாரதி நகர் பேருந்து நிலையத்தையும், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் கட்டப்பட்டுள்ள, கவியரசு கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்தையும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு, வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, சென்னை மாநகர மேயர் பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வியாசர்பாடி மகாகவி பாரதி நகர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்துவிட்டு, கண்ணதாசன் நகர் பேருந்து நிலையத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்றபோது, முல்லை நகர் மேம்பாலம் அருகே, வியாசர்பாடி பகுதியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் சிறுவர்கள் துணை முதலமைச்சருக்கு, கால்பந்தை பரிசாக வழங்கி, நீங்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறீர்கள் என நன்றி தெரிவித்தனர்.




