இந்தியாவின் கூட்டாட்சி உணர்வை பாதுகாப்பதில் நீங்கள் அளித்த குரலுக்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் விவகாரம் தொடர்பாக 8 மாநில முதலமைச்சர்களுக்கு எழுதிய கடிதம் தொடர்பான பதிவை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரது எக்ஸ் தள பக்கத்தில், மோடி அரசு மாநில கவர்னர்களை தவறாக செயல்படுத்துவதாக குறிப்பிட்டு முதலமைச்சர் பதிவை பகிர்ந்துள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அன்புள்ள சகோதரரே, மாநிலங்களின் உரிமைகளையும் நமது இந்தியாவின் கூட்டாட்சி உணர்வையும் பாதுகாப்பதற்காக நீங்கள் கொடுத்த குரலுக்கு நன்றி என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் கூட்டாட்சி உணர்வை பாதுகாப்பதில் நீங்கள் அளித்த குரலுக்கு நன்றி!


