
தாம்பரம் அருகே வங்கி ஊழியர்போல் பேசி ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் மனைவின் வங்கி கணக்கிலிருந்து 5,லட்சம் ரூபாயை அபேஸ் செய்தமர்ம நபரைப் போலீசார் தேடிவருகின்றனர்.
பல வருடங்களாக வங்கி ஊழியர்கள் என்ற போர்வையில் வாடிக்கையாளர்களுக்கு மர்ம நபர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாடிக்கையாளர்களின் KYC, கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் போன்றவைகளை புதுப்பித்துத் தருவதாகக் கூறி, அவர்களுக்கே தெரியாமல் வங்கி கணக்கிலிருந்து பல லட்சம் ரூபாய்யை கொள்ளையடித்து வரும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
குறிப்பாக முதியவர்களைத் தான் இந்த மர்ம கும்பல் அதிகம் டார்கெட் செய்கிறது.தொழில் நுட்பம்குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத முதியவர்களிடம், வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி ஏமாற்றி மாயவலையில் சிக்க வைத்து இந்த மர்ம கும்பல் முதியவர்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை கொள்ளையடித்து வருகிறது.
சைபர் குற்றங்களிலிருந்து பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் எனச் சொல்வதைத் தாண்டி, சைபர் குற்றத்தில் ஈடுபடும் குற்றவாளிகளைப் பிடிக்கப் போதிய நடவடிக்கை எடுப்பதில்லையெனப் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை மேற்கு தாம்பரம் மீனம்பாள் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்வரி (வயது-68) இவரது கணவர் ராணுவத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவர், கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு திடீர் ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கு கடந்த மார்ச் 15-ம் தேதி வங்கி ஊழியர்போல் மர்ம நபர் செல்போனில் தொடர்புக் கொண்டு, வங்கி கணக்கு ரத்தாகப் போவதாகக் கூறியதும் அதிர்ச்சிஅடைந்தார், உங்களுடைய ஆதர், மற்றும் பேன் கார், உடனே அனுப்பினால் ரத்தாகாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் கூறியதும் அவர் சொல்வதை நம்பி அவர் கேட்ட அனைத்தையும் அனுப்பி உள்ளார்.
அப்போது ராஜேஷ்வரி அந்த மர்ம நபரிடம் ஓ.டி.பி எண்ணைச் சொல்லுங்கள் எனக் கூறியதும்
ஓ.டி.பி எண்ணை வங்கி ஊழியர் எனப் பேசிய நபரிடம் தெரித்ததும்ராஜேஷ்வரி அவரது வங்கி கணக்கா தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியிலிருந்து முதலில் 2,லட்சம் அதைத் தொடர்ந்து நான்கு மணி நேரத்துக்குள் ஜந்து முறை 5,லட்சத்தி 29,ஆயிரம் ரூபாய்யை அந்த மர்ம நபர் கொள்ளையடித்துள்ளார்.
தெரியவந்தது.உடனே இதுகுறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் ராஜேஷ்வரி புகார் அளித்துள்ளார், புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையைத் துவங்கி உள்ளனர்.
தாம்பரத்தில் ராணுவ அதிகாரின்மனைவியிடம் நான்கு மணி நேரத்தில் 5, லட்சம் ரூபாய் வங்கி அதிகாரிகள் கூறி கொள்ளையடித்திருப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நான் பேங்க் மேனேஜர் பேசுகின்றேன் எனக் கூறி நூதன முறையில் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்று வரும் அந்த மேனேஜர் எப்போது போலீசாரிடம் சிக்கவான்.

