Advertisements

காவல்துறையை ஆக்கபூர்வமாக செயல்பட வைக்க முதலமைச்சர் முயற்சி செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சித் தலைவர் உதயநிதி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் உட்பட மூன்று பேர் சேர்ந்து, ஒரு சிறுவனைக் கட்டாயப்படுத்தி மது அருந்தச் செய்து, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார். காவல்துறையினரிடமிருந்து காப்பாத்திக்க, அந்தச் சிறுவன் காவல்நிலையத்திற்கு ஓட வேண்டிய நிலையில் தான் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிஞ்சு போய் இருக்கு என்று குற்றம் சாட்டினார்.
இதுமட்டுமல்ல, வேளச்சேரியில் நடப்பயிற்சி செல்ல வெளிய வந்த 61 வயசு பெண்மணியை, ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்த கொடுமையும் நடந்துருக்கு என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, கும்பகோணத்தில் ஆளுங்கட்சியினர் தாக்கியதில் ஒரு காவல்துறையினருக்குக் கை உடைஞ்சு போனதாகவும் செய்தி வந்துள்ளதாகக் கூறினார்.
இந்த சோபா மாடல் ஆட்சியில், காவல்துறையினாலும் பாதுகாப்பு இல்லை. காவல்துறைக்கும் பாதுகாப்பு இல்லை என்று விமர்சித்தார். ஆட்சியை காப்பாத்திக்க எம்.எல்.ஏ -க்கள் பிடிக்கிற வேலையை விட்டுட்டு, தன்னுடைய கட்டுபாட்டில் இருக்கும் காவல்துறையை ஆக்கபூர்வமாக செயல்பட வைக்க முதலமைச்சர் முயற்சி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
Advertisements


