தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியே தொடரும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி…..!

திமுக தொண்டர்களின் உழைப்பிற்கான பலன் வருகின்ற 4 ஆம் தேதி கிடைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, சிந்தாதரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் உழைப்பாளர் தினத்தையொட்டி, தொழிலாளர் நினைவுச் சின்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவப்பு சட்டை அணிந்து வந்து  மாரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது, திமுக தொண்டர்களின் உழைப்பிற்கான பலன் வருகின்ற 4 ஆம் தேதி கிடைக்கும் என்றும் இன்னும் இரண்டு நாட்களில் உங்கள் அனைவருக்கும் நல்ல செய்தி வரும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தில் திமுக ஆட்சி மீண்டும் தொடரும் என்று கூறினார்.
இந்நிகழ்வில், அமைச்சர்கள் சேகர்பாபு, சுப்பிரமணியன், நேரு, மேயர் பிரியா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொமுக இணைப்புச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *