இஸ்லாமிய மக்களுக்கு பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார் ஈபிஎஸ்!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பக்ரீத் பண்டிகை முன்னிட்டு, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதில், இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், தனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில், உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிட, அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ்ந்திட வேண்டுமென்று மனதார வாழ்த்துவதாகக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *