Advertisements

தவெக ஆட்சியின் கோமாளித்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தவெக ஆட்சியில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுக்க அரசிடம் நிதி இல்லை என்று கூறுகிறார்கள் ஆனால், சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கார் வாங்க அரசிடம் பணம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், மக்கள், விவசாயிகள் பிரச்சனைகள் குறித்தக் கேள்விகளுக்குச் சட்டப்பேரவையில் உரிய பதில் அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சனைகளுக்கு முதலமைச்சர் பதில் கூறுவதில்லை, ஆனால் அமைச்சர்கள் சம்பந்தம் இல்லாமல் பிரச்சனையை திசை திருப்பும் நோக்கில் பதில் அளித்து வருகிறார்கள் என்று கூறினார். எனவே, தவெக ஆட்சியின் கோமாளித்தனத்திற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்.
Advertisements


