உலக மக்கள் இந்திய விண்வெளி நிறுவனத்தில் சேர வேண்டும் பிரதமர் வலியுறுத்தல்.!

Advertisements

உலகெங்கிலும் உள்ள மக்கள், இந்திய விண்வெளி நிறுவனத்தில் சேர வேண்டும் என்று உணரும் ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

தில்லியில் உள்ள விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் நிறுவனர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது, ஒரு புதிய துறையில் தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், நிலைத்தன்மையுடன் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

உலகெங்கிலும் உள்ள மக்கள், இந்தியாவிற்கு வந்து ஒரு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்திலோ அல்லது இந்திய விண்வெளி நிறுவனத்திலோ சேர வேண்டும் என்று உணரும் ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். உலகம் எங்கிலும் உள்ள முழுத் திறமையாளர் கூட்டத்தையும் ஒரு காந்தத்தைப் போல நம்மால் ஈர்க்க முடியும் என்று தான் உறுதியாக நம்புவதாகத் தெரிவித்தார்.

நமது நாட்டு மக்கள் அதிகத் திறமையைக் கொண்டிருப்பதால், நம்மால் விரைவாக  ஒரு தனி இடத்தைப் பிடிக்க முடியும் என்று குறிப்பிடடார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *