“தவெகவுக்கு முதல் ஆதரவுக் கடிதம் கொடுத்தது காங்கிரஸ்!” – மாணிக்கம் தாகூர்.!

Advertisements
தவெகவுக்கு முதல் ஆதரவு கடிதம் காங்கிரஸ் கட்சி தான் கொடுத்தது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்தியா கூட்டணியில் தவெக இருக்கிறதா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், எப்போது தவெகவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிடைக்கிறார்களோ, அப்போது அவர்களை இந்தியா கூட்டணியில் இணைத்துக் கொள்ள சொல்வோம் என்று தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாதவர்களை நாங்கள் கூட்டணியில் இணைய வரச்சொல்ல முடியாது என்று கூறினார். சட்டசபை தேர்தலில் தவெக 106 இடங்களைப் பிடித்துடன் விஜய் முதலில் ராகுல் காந்தியை, செல்போனில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டார் என்று கூறினார். தவெகவுக்கு, காங்கிரஸ் கட்சி முதல் ஆதரவு கடிதம் கொடுத்ததால் தான், இன்றைய அமைச்சர் எல்லாம் அமைச்சராவதற்குக் காரணம் என்று தெரிவித்தார்.
இல்லையென்றால், மத்திய அமைச்சர் அமித்ஷா தவெகவின் கதையையும் முடித்திருப்பார் என்று தெரிவித்தார். மேலும் கட்சியை உடைத்து, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியிருப்பார்கள் அவர்களைப் பொறுத்தவரை இந்த நிலை அனைவருக்கும் புரியும் என்று கூறினார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *