தவெகவில் இணையும் திமுகவின் முக்கிய புள்ளி.! பனையூரில் ரகசியப் பேச்சு?

தமிழக அரசியல் களத்தில் நாளுக்கு நாள் திருப்பங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக,  விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்ததிலிருந்து மற்ற கட்சிகளில் இருந்து யார் அந்தப் பக்கம் தாவப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் உச்சத்தில் இருக்கிறது. ஏற்கனவே சில முக்கியப் புள்ளிகள் தவெகவை நோக்கி நகர்ந்துள்ள நிலையில், தற்போது தென் மாவட்டத்தைச் சேர்ந்த திமுகவின் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஒரு முக்கிய முன்னாள் அமைச்சர் பற்றிய பரபரப்பான தகவல் ஒன்று தீயாகப் பரவி வருகிறது..இது பற்றிய பின்னணி தகவல்கள் குறித்து தற்பொழுது பார்க்கலாம்..!

கடந்த சில காலங்களாகவே தமிழக அரசியலில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பல முக்கியத் தலைவர்கள் தேர்தல் களத்தில் பின்னடைவைச் சந்தித்ததும், சில மூத்த அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதும் அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அப்படிப்பட்ட சூழலில், அந்த தென் மாவட்ட முன்னாள் அமைச்சரும் கூட, கட்சி நடவடிக்கைகளில் இருந்து சற்று விலகி இருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த காலங்களில் பல முக்கியத் துறைகளைக் கவனித்தவர், இப்போது கட்சியின் பொது நிகழ்ச்சிகளிலோ அல்லது ஆலோசனைகளிலோ முன்புபோல ஆர்வம் காட்டுவதில்லையாம்!

இதுதான் இப்போதைய ஹாட் டாபிக்! தேர்தலில் போட்டியிடாத அதிருப்தியில் உள்ள அந்த முன்னாள் அமைச்சர், தவெகவின் முக்கியத் தலைமையை நேரடியாக அணுகாமல், பனையூரில் உள்ள கட்சித் தலைமையுடன் மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, தவெகவுக்குள் பெரும் செல்வாக்குடன் வலம் வரும் ஒரு முக்கிய பிரமுகர் மூலமாக இந்தத் தொடர்புகள் பலப்படுத்தப்பட்டு வருவதாகவும், கட்சியில் இணைய அவர் தீவிரத் திட்டம் தீட்டி வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் கொளுத்திப் போட்டுள்ளன.

இருப்பினும், கதவுகள் உடனே திறக்கப்படுமா என்றால் அதுதான் கேள்விக்குறி! அந்த முன்னாள் அமைச்சரை கட்சியில் சேர்ப்பது குறித்து தவெகவின் முக்கிய நிர்வாகிகள் மத்தியிலேயே கூட இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்றும், கடும் ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், இந்த அரசியல் மூவர் ஒரு அதிரடி மூவ் வைத்துள்ளார். சமீபத்தில் சிறுபான்மை அமைப்புகளை ஒன்றிணைத்து ஒரு பிரம்மாண்ட மாநாட்டை நடத்தி காட்டியுள்ளார் அவர்! தன் பின்னால் பலரும் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் பலரைக் கூட்டிய அந்த மாநாட்டில், திமுகவைச் சேர்ந்த சில முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டதுதான் திமுக தரப்பில் இப்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

“திமுகவிலேயே இருந்து கொண்டு தனது சொந்த செல்வாக்கைக் காட்டிவிட்டு, பின்னர் தவெகவில் தஞ்சம் புகுவாரா?” என்ற கேள்வி இப்போது தென் மாவட்ட திமுக வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளது. இதனால் உள்ளூர் உடன்பிறப்புகள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தத்தில், தமிழக அரசியலில் அடுத்தடுத்து நடக்கப் போகும் மாற்றங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. திமுகவின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தவெகவை நோக்கி நகர்கிறாரா அல்லது இது வெறும் வதந்தியா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *