உக்கிரமடையும் போர்: ரஷ்யா – உக்ரைன் மோதலில் தொடரும் உயிரிழப்புகள்.!

Advertisements
 உக்ரைன் – ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் மீண்டும் நடத்திய பரஸ்பரத் தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்தனர்.
உக்ரைனின் வணிக வளாகத்தில், ரஷ்ய ராணுவம் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்தியத் தாக்குதலில் 16 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, இரு நாடுகளும் மீண்டும் நடத்திய பரஸ்பரத் தாக்குதல்களில் மேலும் 10 போ் உயிரிழந்தனா்.
இதில், ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் உக்ரைனில் 7 பேரும், ரஷ்யாவின் கிராஸ்னோதா் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 பேரும் உயிரிழந்தனா்.
உக்ரைனிடம் வான் பாதுகாப்பு ஏவுகணைகளுக்குத் தட்டுப்பாடு நிலவும் சூழலைப் பயன்படுத்தி, ரஷ்ய ராணுவம் ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *