
குவகாத்தியில் நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் தென்னாப்பிரிக்க அணி 314 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது. இரண்டாவது போட்டி அசாமின் குவகாத்தியில் நடைபெற்று வருகிறது. தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்துள்ளது.
இதையடுத்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் முதல் இன்னிங்சில் 288 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதையடுத்து இரண்டாம் இன்னிங்சைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி மூன்றாம் நாள் ஆட்டநேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டு நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் தென்னாப்பிரிக்க அணி வலுவான நிலையில் உள்ளது.


