இந்திய அணி சாதனை..!

ஜிம்பாவேயில் நடைபெற்ற இளையோர் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைத்தளப்பதிவில் இளையோர் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். இதில், 19 வயது உட்பட்டோருக்கான உலகக் கோப்பையை மீண்டும் தாயகத்திற்கு கொண்டு வந்துவிட்டனர் என்றும் நமது வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தது என்றும் பாராட்டுக்கள் தெரிவித்தார். இந்த வெற்றி எதிர்காலத்தில் பல இளைஞர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்றும் தொடர் முழுவதும் மிகச் சிறப்பாக விளையாடி, திறமையை வெளிப்படுத்திய வீரர்களை நினைத்து பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், இளையோர் உலகக் கோப்பையை வென்று, நாட்டிற்கு மற்றொரு பெருமைமிக்க தருணத்தை வழங்கிய இந்திய அணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.  திறமை மற்றும் மனவுறுதியின் உண்மையான வெற்றி என்றும் இறுதிப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷியின் பிரமிக்க வைக்கும் ஆட்டமும், இந்தத் தொடர் முழுவதும் அவரது அசாதாரணமான செயல்பாடும் வரும் ஆண்டுகளில் பலராலும் நினைவு கூரப்படும் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *