ஜெயில்ல என்னை வந்து எவன் பார்த்தான்? கனிமொழி வந்ததும் ஓடி வந்தாங்க.!

Advertisements

ஒவ்வொரு தேர்தலின் முன்பும் ஆ ராசாவின் பிரச்சார பேச்சு திமுகவுக்கு எதிராக திரும்புவது தொடக்கதையாகி வருகிறது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது, ஸ்டாலினையும் எடப்பாடியையும் ஒப்பிட்டு ஆ ராசா பேசிய பேச்சில், அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயாரை கொச்சைப்படுத்தி விட்டதாக அதிமுகவினர் சர்ச்சை  கிளப்பினார்கள். அது கொங்கு பகுதியில் எடுபடவும் செய்தது.

இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 21 நாட்களே இருக்கும் நிலையில் ஆ ராசா பேசியதாக ஒரு ஆடியோ அதிர்வலை கிளப்பியுள்ளது. 2016 ஆம் ஆண்டு ஆ ராசா குன்னூரில் உள்ள  தனது வீட்டில் தன்னுடைய ஆதரவாளர்களிடம் தனிப்பட்ட முறையில் உரையாடியதுதான் ஆடியோவாக வெளியே வந்துள்ளது.

அந்த உரையாடலில் ராசா இப்படி கூறுகிறார்… “நான் 2ஜி வழக்கில் சிறையில் இருந்தபோது திமுகவோட பிரதிநிதியாக என்னை யார் வந்து பார்த்தார்கள்? கலைஞர் துரைமுருகனை அனுப்பினாரா? அல்லது அமைச்சர்கள் வந்து என்னை பார்த்தார்களா? இரண்டு மாதம் கழித்து கனிமொழி கைது செய்யப்பட்ட பின்னரே எல்லாரும் ஓடி வராங்க. இந்த இரண்டு மாதத்தில் என்னோட மனநிலை என்னவா இருந்திருக்கும். கலைஞர் டிவிக்கு பணம் போயிடுச்சு.  அதுக்கு மேல நான் சொல்ல விரும்பல. என் வீட்டில் சிபிஐ ஏதாவது எடுத்தானா?

ஒரு நாள் என்னை ஜெயில வந்து பார்த்த மு க அழகிரி, ‘கலைஞர் டிவிக்கு ஸ்டாலின் மூலமா தான் பணம் போயிருக்குதாம். எதுக்கு நீயும் கனிமொழியும் ஜெயில்ல இருக்கீங்க? இதெல்லாம் சொல்லிட்டு நீ வெளியே வர வேண்டியதுதானே ‘என்று என்னிடம் கேட்டார். நமக்கு சோதனைகள் வரும். ஆனால் அதில் நாம் தளர்ந்து விடக்கூடாது என்பதற்காக இதை சொல்றேன் என்று பேசிய ராசா, தனது ஆதரவாளர்களிடம் இன்னொரு விஷயத்தையும் கூறுகிறார்.

அதாவது, ” கலைஞருக்குப் பிறகு கட்சி அவர்கிட்ட தான் போகும். ஆனா பிடி என் கிட்ட இருக்கும்.  கேஸ்ல இருந்து வெளியே வந்துட்டா நான் தான் ஹீரோ. என்னோட கேஸ் பத்தி தமிழ்ல இங்கிலீஷ்ல புக் எழுதியிருக்கேன். அத படிச்சிட்டு ஹிந்து ராம் மலைச்சி போயிட்டாரு. சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங், சிதம்பரம் எல்லாரையும் இந்த புத்தகத்தில் கிழித்து தொங்க விட்டிருக்கேன்.

எனக்குன்னு ஒரு காலம் வரும். கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் தங்கச்சி கனிமொழியை நம்ப மாட்டாரு. ஆனால், என்ன நம்புவாரு. நான் சாதியை விட்டு வெளியே வந்துட்டேன். என்னை யாரும் எஸ்சி-ன்னு பாக்குறது கிடையாது.  சிவசங்கர் வேணும்னா அப்படி பார்க்கலாம். பெரம்பலூர் பல கட்சிக்காரன் அண்ணன் தம்பியா தான் பார்க்கிறான். இங்க மலைக்குக் கீழே கொங்கு வெள்ளாள கவுண்டர் எல்லாம் என் மேல அவ்ளோ பாசம் வைத்திருக்கிறான்.

நான் சாதிய தாண்டிட்டேன். பொருளாதாரம் எங்கிட்ட இருக்கு.  அறிவு இருக்கு. அவருக்கு இருக்கா? டெல்லி வந்து அப்படியே கொட்டிடுவாரா? இதுக்கு மேல என்ன வேணும். நமக்குன்னு ஒரு காலம் வருகிறது என்று ஆ.ராசா  தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருக்கிறார். இந்த ஆடியோ இப்போது சமூகத்தலங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இது திமுக வின் உட்கட்சி  அரசியலாக மட்டும் பார்க்கப்படவில்லை. 2ஜி வழக்கில் ஆ ராசா உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டு விட்ட நிலையில், கலைஞர் டிவிக்கு பணம் போச்சு அதுக்கு மேல சொல்ல விரும்பல என ராசா ஒப்புதல் வாக்குமூலமாகவே தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் ஆடியோவை சுட்டிக்காட்டி, அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் முதல்வர் ஸடாலினை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில் , நாங்கள் அதிமுகவை விற்கவில்லை; நீங்கள் தான் காங், கட்சியிடம் உங்கள் கட்சியை விற்பனை செய்துவிட்டீர்கள். காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக தான். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில், கனிமொழியும், ஆ. ராசாவும்  காங்கிரஸ்  கட்சி ஆட்சியின் போது கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

கூட்டணியில் இருக்கும் போதே, குற்றம் சுமத்தப்பட்டு திஹார் ஜெயிலில் இருந்தவர்கள், நம்மை பற்றி பேசலாமா? ஜெயிலில் இருந்தவரின் ஆடியோ பரவி வருகிறது. அதுபற்றி சொல்கிறேன். ராஜா ஆடியோவில், திமுகவில் கனிமொழிக்கு காட்டிய அக்கறையை ராஜாவுக்கு காட்டவில்லை.

சமூகநீதி பேசும், திமுகவில் ஜாதிய பாகுபாடு இருக்கிறது. கலைஞர் ‘டிவி’க்கு பணம் போனதை ஒப்புக்கொள்கிறார். ‘கருணாநிதியின் இறுதி காலத்தில், ஸ்டாலின் அவரை கைதியாக தான் வைத்திருந்தார். ஸ்டாலின் கட்சியை கைப்பற்றி விட்டார்’ என்கிறார் ராஜா.

‘கருணாநிதியின் இறுதி காலத்தில், ஸ்டாலினுக்கும், கனிமொழிக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதனால் தான் இந்த முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட கனிமொழிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை’ என்கிறார். ‘ஸ்டாலினுக்கு பெரிய மூளை இருக்குதா? டில்லிக்கு போனால் ஆங்கிலத்தில் கிழித்துவிடுவாரா? கனிமொழியை ஒருநாளும் நம்ப மாட்டார். என்னை எப்போதும் கட்சியில் இருந்து வெளியில் தள்ள முடியாது; என் செல்வாக்கு, என் அறிவு, என் கம்யூனிட்டி என எதையும் தள்ள முடியாது’ என்கிறார்.

ஸ்டாலின், அவரது அப்பாவை கைதி போல வைத்திருந்தார். சொந்த அப்பாவையே அப்படி வைத்தவர், நாட்டு மக்களை எப்படி வைப்பார். உண்மை செய்தி ராஜா மூலம் வெளியில் வந்துவிட்டது.திமுகவின் இறுதி அத்தியாயத்தை ஸ்டாலின் எழுதுகிறார். அண்ணாதுரை தோற்றுவித்த திமுகவை, கருணாநிதியும், ஸ்டாலினும் கபளீகரம் செய்துவிட்டனர்.
இப்படி கடுமையாக விமர்சித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஆ.ராசாவின் ஆடியோவும் அதை வைத்து எடப்பாடி பேசிய பேச்சும் இணையத்தில் பரவி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *