மது குடித்ததைத் தட்டிக்கேட்டவருக்கு நேர்ந்த கதி..!

Advertisements
கோவில்பட்டி அருகே கட்டுமானத் தொழிலாளியைச் செங்கல்லால் அடித்துக் கொன்ற சகோதரர்கள் உள்பட 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ் மகன் கார்த்திக் கட்டுமானத் தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில், கார்த்திக் வீடு அருகே அதே ஊரைச் சேர்ந்த வேலுச்சாமி மகன்கள் வேல்முருகன், அய்யாதுரை, முத்துசாமி மகன் முனியசாமி ஆகியோர் மது அருந்தியுள்ளனர். இதைக் கார்த்திக், கண்டித்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த வேல்முருகன் உள்ளிட்ட 3 பேரும், அருகில் கிடந்த செங்கல்லை எடுத்து கார்த்திக்கைச் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றனர். பலத்த காயமடைந்த கார்த்திக் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த காவல்துறையினர் கார்த்திக் உடலைக் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிந்து கொலையாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில் கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் வேல்முருகன், அய்யாதுரை, முத்துசாமி ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *