“தவெக சோபா மாடல்; திமுக அழும் பாப்பா மாடல்” – அமைச்சர் ரமேஷ் கிண்டல்!

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில், தவெக அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் நடைபெற்ற பிரம்மாண்ட இணைப்பு விழாவில், அதிமுகவில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சுமார் 15,000 ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அவர்கள் தவெகவின் கொள்கைகளை ஏற்று உறுதியேற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் ரமேஷ் பேசுகையில், “பதவிகளைத் துறந்து கொள்கைக்காகத் தவெகவில் இணைந்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த இணைப்பு புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் தவெக-வின் கோட்டையை மேலும் பலப்படுத்தியுள்ளது” என்றார்.

தொடர்ந்து திமுகவை விமர்சித்த அவர், “தவெக ஒரு சோபா மாடல் (வலிமையானது). ஆனால் திமுக ஒரு அழும் பாப்பா மாடல். எதற்கெடுத்தாலும் திமுக அழுதுகொண்டே இருக்கிறது” என்று கிண்டலாக விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *