அமெரிக்கா vs ஈரான் மோதல் தீவிரம்.. ஈரான் மீது அணு ஆயுதத் தாக்குதல்.!

Advertisements

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்த அந்த 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமா நேற்றோட முடிவுக்கு வந்துடுச்சு.. ஆனா, இப்போ நிலைமை என்ன தெரியுமா? “ஈரான் வெள்ளைக் கொடியைக் காட்டிட்டு முழுசா சரணடையணும்”னு டிரம்ப் கொந்தளிச்சுக்கிட்டு இருக்காரு. மறுபடியும் ஈரான் தரப்புல இருந்தோ, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அமெரிக்கா ஈடுபட்டது..

அதுனால போர் நிறுத்த பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தில் எந்த பயனும் இல்லை என்று தெரிவித்துள்ளது.. இதற்கிடையே, “ஈரான் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம் போடுது”ங்குற ஷாக்கிங்கான ரகசியத் தகவல்களும் லீக் ஆகியிருக்கு. சரி, உலகத்தையே உலுக்கப் போற இந்த அமெரிக்கா – ஈரான் மோதலோட தற்போதைய நிலவரம் என்ன? ஹார்முஸ் நீரிணையில என்ன நடக்குறது அப்டின்றதா பத்தி விரிவாக பார்க்கலாம்.!

கடந்த பிப்ரவரி 28-ம் தேதியிலிருந்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் கடுமையான போர் நடந்துட்டு வந்தது நமக்குத் தெரியும். இதற்கிடையில், கடந்த ஜூன் 17-ம் தேதி இரு நாடுகளுக்கும் இடையே ஒருவழியா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ‘அடுத்த 60 நாட்களுக்கு யாரும் சண்டையிடக் கூடாது; இந்த அவகாசத்துக்குள்ள ஒரு இறுதி அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தணும்’னு அப்போ முடிவு பண்ணாங்க.

ஆனா, சொன்ன மாதிரி அந்த 60 நாட்கள் காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்துடுச்சு! ஒப்பந்தம் என்னவோ முடிஞ்சது, ஆனா சமாதானம் வரல. இதுபத்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்றைய பேட்டியில ரொம்பத் தெளிவா சொல்லிட்டாரு: “ஈரான் தரப்பு வெள்ளைைக் கொடியைக்காட்டிட்டு நிபந்தனையற்ற முறையில சரணடையணும்; அதுல எந்த மாற்றமும் இல்லை!” அப்படின்னு கறாரா சொல்லியிருக்காரு.

மறுபக்கம், ஈரானின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி ,  “அமெரிக்கா இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடிக்கடி மீறிட்டே இருந்தது. அதனால இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதால எந்தப் பயனும் இல்லாம போச்சு” அப்படின்னு குற்றம் சாட்டியிருக்காரு. அதாவது, ஒப்பந்தம் வெறும் பேப்பராவே போச்சுங்கன்னு பேசிற்க்காரு.. சரி, நிலைமை இவ்வளவு தூரம் மோசமாகப் போயிட்டு இருக்கிற இந்த நேரத்துல, அமெரிக்காவிலிருந்து ஒரு முக்கியமான தகவல் வெளியாகி இருக்கு.! என்னனா ,

 அமெரிக்காவின் முன்னாள் காங்கிரஸ் உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் கிரீன், தனது எக்ஸ் பக்கத்துல , “வெளிநாட்டுப் போர்களில் இனி அமெரிக்கா ஈடுபடாதுன்னு டிரம்ப் வாக்குறுதி கொடுத்திருந்தார். ஆனா, இப்போ ஈரான் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது பத்தி வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் தீவிரமான ஆலோசனைக் கூட்டங்களை நடத்திட்டு வராங்க!” அப்படின்னு வெளிப்படையாக  தெரிவிச்சிருக்காரு..

ஈரான் இன்னும் அணு ஆயுதம் தயாரிக்கிற அளவுக்கு வரலைன்னு அமெரிக்க உளவுத்துறையே ரிப்போர்ட் கொடுத்திருந்தாலும், டிரம்ப் நிர்வாகம் அதைச் சிறிதும் கண்டுகொள்ளலையாம். இஸ்ரேல் சொல்லுற எச்சரிக்கைகளைக் கேட்டு மட்டுமே அவங்க நடந்துக்கிறதா கிரீன் குற்றம் சாட்டியிருக்காரு.

ஒருவேளை ஈரான் மீது அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினா, அது உலகப் போராக மாறி லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கும்னு உலகளாவிய நிபுணர்களும் எச்சரிச்சுக்கிட்டு இருக்காங்க. வெள்ளை மாளிகை தரப்புல இருந்து இப்போ வரைக்கும் இதுக்கு எந்தப் பதிலும் அளிக்கப்படலங்கிறதுதான் ரொம்பவே பயமுறுத்துற விஷயம்!

இந்தச் சூழலில், அமெரிக்காவுடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ராஜதந்திர முயற்சிகள் முழுவதுமாக முடங்கிப் போயிருக்கு. இதன் காரணமாக, ஈரான் தனது கொள்கையைத் தற்காப்பு நிலையில் இருந்து முழுமையான ‘தாக்குதல் நிலைக்கு’ மாற்ற முடிவு செஞ்சிருக்குன்னு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிச்சிருக்கு.

குறிப்பா, ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் அப்படியே முடங்கிப்போய் கிடக்கின்றன. இதுபத்தி ஒரு மூத்த ஈரானிய அதிகாரி சொல்லும்போது, “ஹார்முஸ் நீரிணையிலும் சரி, பிராந்தியம் முழுவதும் சரி… பதற்றத்தை அதிகரிக்க எங்களது அமைப்புகள் தயாரா இருக்கணும்.

ராஜதந்திர முயற்சிகள் முற்றிலும் தோல்வியுற்றால், அமெரிக்கக் கடற்படை முற்றுகையை உடைக்க நாங்க சரியான நேரத்தில், துல்லியமான ராணுவத் தாக்குதலை நடத்துவோம்!” அப்படின்னு மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்திருக்காரு. ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்துல, ஹார்முஸ் நீர்வழியை நிர்வகிக்கும் உரிமை தங்களுக்குத்தான் இருக்குன்னு ஈரான் சொன்னுச்சு. ஆனா, வாஷிங்டன் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துடுச்சு.

அங்கீகரிக்கப்படாத பாதையில சென்றதா கூறி ஈரான் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினதாலதான், இந்த மோதல்கள் மறுபடியும் விஸ்வரூபம் எடுத்திருக்கு. இதற்கிடையே FOX News தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அதிபர் டிரம்ப், ஈரானைப் பத்தி பேசும்போது, “எங்களது கடற்படை முற்றுகையால ஈரான் தினமும் நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை இழந்துட்டு வருது. இந்த வாரத்துல அவங்க மீது இன்னும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போறோம்” அப்படின்னு சொன்னாரு.

அதுமட்டுமில்லாம, ஹார்முஸ் ஜலசந்தியில் ஒரு தற்காலிக புதிய போக்குவரத்துப் பாதையை உருவாக்க ஈரானுடன் ஓமன் நாடு ஒப்பந்தம் செய்ய முயல்வதாகத் தகவல் வெளியாகி இருக்கு. இதைக் கேள்விப்பட்ட டிரம்ப், ஓமனுக்கு ஒரு சம்மட்டி அடி எச்சரிச்சிருக்காரு! “ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்துல ஒருவேளை ஓமன் குறுக்கே நின்றால், அவர்கள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்துவோம்!” அப்படின்னு வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்திருக்காரு.

ஹார்முஸ் ஜலசந்தி கிட்டத்தட்ட தங்கள் கட்டுப்பாட்டுக்கு வந்துடுச்சும், அதை அமெரிக்காவின் பகுதியாவே அறிவிக்கப் போவதாகவும் டிரம்ப் கூறியிருக்காரு. மேலும், ஈரான் அணுஆயுத வல்லரசாக மாறுவதைத் தடுப்பதே எங்களது முதன்மை இலக்குன்னு அவர் திட்டவட்டமா சொல்லியிருக்காரு. இதே பேட்டியில காசா – இஸ்ரேல் விவகாரம் பத்திப் பேசின டிரம்ப், “ஹமாஸ் அமைப்பினர் தங்களிடமுள்ள ஆயுதங்களைக் கைவிட்டு வர்றாங்க.

அதனால காசா மீது இஸ்ரேல் இனி தொடர்ந்து தாக்குதல்களை நடத்த வேண்டிய அவசியமில்லை” அப்படின்னும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பக்கம் 60 நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துடுச்சு; இன்னொரு பக்கம் அணு ஆயுதத் தாக்குதல் பற்றிய அச்சம் எழுஞ்சிருக்கு; ஹார்முஸ் நீரிணையில் ஓமனும் அமெரிக்காவும் மோதிக்கொள்ளும் சூழல் உருவாகியிருக்கு. இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால், அடுத்து உலக நாடுகளுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட நேரிடும்..

இந்த விவகாரத்துல டிரம்பின் அதிரடி நடவடிக்கைகள் சரியா அல்லது ஈரானின் நிலைப்பாடு சரியா? உங்களோட கருத்துக்களை மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *