
இந்தியாவில் அமித் ஷாவை விட அதிக செல்வாக்குள்ள ‘பவர் ஸ்டார்’ எங்கள் தலைவர் முதல்வர் விஜய் தான் எனவும், அவர்தான் எப்போதும் எதிலும் வல்லவர் என்ற புகழாரம் சூட்டியிருக்கிறார். பாஜகவின் காலில் விழுவதற்கு திமுக நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.. தமிழகத்தை பாஜக எப்படி காவிமயமாக்க முயற்சித்ததோ, அதேபோன்று திமுக கருணாநிதி மயமாக்க முயற்சித்தது என தமிழக வெற்றிக் கழக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி மைதானத்தில் தமிழக வெற்றிக் கழக அரசின் 100 வது நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினர்
தொடர்ந்து பேசிய நாஞ்சில் சம்பத்,” . தமிழக வெற்றி கழகம் இன்று பெற்றுள்ள வெற்றி இந்திய துணை கண்டத்தில் எந்த கட்சியும் இப்படி ஒரு வெற்றியை பெற்றதில்லை. அண்ணா ஆட்சியைப் பிடிக்க 18 ஆண்டுகள் ஆனது, எம்ஜிஆர் ஆட்சியை பிடிக்க 5 ஆண்டுகள் ஆனது.
ஆனால் மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே முதல் விஜய் ஆட்சியை பிடித்துள்ளார்.
இந்த வரலாற்றினை இந்தியத் துணைக் கண்டத்தில் எந்த தலைவரும் எடுத்ததில்லை. அன்று என்டிஆர் ஆந்திராவில் வெற்றி பெற்றார். அவர் ஆந்திராவில் நிகழ்த்திய அதிசியத்தை இன்று முதல்வர் விஜய் தமிழகத்தில் நிகழ்த்தி காட்டியுள்ளார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு த. வெ. க. பெயரை சொல்வதற்கு அன்று நடுக்கம் இருந்தது. எங்கள் தலைவர் பெயரை சொல்வதற்கு அவர்களுக்கு தயக்கம் இருந்தது.
ஆனால் இன்றைக்கு எங்கள் தலைவர் பெயரை சொல்லாமல் ஒரு நாளை நகர்த்த முடியாமல் இருக்கிறார்கள். எங்கள் தலைவர் முதல் விஜய் இன்றைக்கு அரசியலை ஆக்கிரமித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் அதிகாரத்தில் இருந்த மு க ஸ்டாலின் கொத்து பரோட்டோ போடப்பட்டார். 1967ல் 16 அமைச்சர்கள் தோற்றுப் போனார்கள். 2026ல் 15 அமைச்சர்களை வீட்டுக்கு அனுப்பிய கட்சி த.வெ.க. இன்றைக்கு அவர்கள் திரிச்சங்கு நிலையில் உள்ளனர்.
திமுக காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கையை தொண்டர்கள் இழந்து விட்டனர். த.வெ.க. ஆட்சிக்கு வந்ததும் இன்றைக்கு பெண்களை பாதுகாக்க சிங்கப்பெண் அதிரடி அடிப்படை. மு க ஸ்டாலின் முதல்வராக இருந்து போது நித்தம் நித்தம் போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்படும் நிலை இருந்தது.
ஆனால் இன்றைக்கு முதல்வராக விஜய் பொறுப்பேற்றதும் போக்சோ சட்டத்தில் பதிவு செய்ய வேண்டிய நிலையில் தமிழ்நாடு இல்லை என்பதை நிறைவேற்றிக் காட்டி இருக்கிறார். பெண்கள் இன்றைக்கு பாதுகாப்பான நிர்வாகத்தின் கீழ் இருக்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
காவேரி பிரச்சனை, மேகதாது பிரச்சனையில் தமிழக முதல்வர் விஜய் தனி தீர்மானம் கொண்டு வந்த போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திருத்தங்களை சொன்ன போது, முதல்வர் விஜய் எவ்வித காழ்ப்புணர்ச்சி இல்லமால் அந்த திருத்தத்தை தீர்மானத்தில் சேர்த்துக் கொண்டார்.
முதல்வர் விஜய்யின் பெருந்தன்மை மலையை விட பெரியது. பாஜகவின் காலில் விழுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். மோடி காலை காட்ட மாட்டீங்கிறார். கால் உங்களுக்கு சிக்கவில்லை,. திமுகவிற்கு பாஜகவுடன் கள்ளக்காதல் இருக்கிறது என்பதை முதலில் அறிவித்தவர் எங்கள் தலைவர் விஜய்.
இன்றைக்கு திமுக ஒன்றிய அரசு எதிர்த்து ஏன் போராடவில்லை. தொகுதி மறுசீரமைப்பை கண்டித்து தமிழக வெற்றி கழகம் போராடுகிறது, சட்டமன்றத்தில் அதை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுகிறது. திமுக என்ன செய்யப் போகிறது.இந்தியாவில் அமித்ஷாவை விட அதிக செல்வாக்குள்ள பவர் ஸ்டார் எங்கள் தலைவர் முதல்வர் விஜய் தான்.
ஆனால் தமிழகத்தை பாஜக எப்படி காவிமயமாக்க முயற்சித்ததோ, அதேபோன்று திமுக கருணாநிதி மயமாக்க முயற்சித்தது.. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டது. ஆனால் தமிழக வெற்றி கழக ஆட்சியில் திட்டங்களுக்கு தலைவர்கள் பெயர்கள் வைக்கப்படுகிறது.
சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் மோடியின் குஜராத்தை விட தமிழகம் இன்றைக்கு முன்னேறுகிறது” என்றார். நாக்கு இருக்கிறது என்று நஞ்சு கலந்த செய்தியை ஊட்டும் நாஞ்சில் சம்பத் அவர்களைப் பற்றி உங்கள் கருத்தை நம் ஜெம் கமென்ட்ல பகிரவும்..





