Russia : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை.!

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரஷ்யாவின் கிழக்குக் கடற்கரை நகரமானக் கம்சட்கா பிராந்தியத்தில் திடீரெனச் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் பதிவு செய்யப்படுள்ளது.

பின்னர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகள் ஆக பதிவாகி உள்ளது. இது குறித்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் 300 கிலோ மீட்டர் கடற்பரப்பில் ராட்சத அலை உருவாகும் என தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *