முப்பெரும் விழா தொடர்பாக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்..!

Advertisements

திமுக முப்பெரும் விழா தொடர்பாக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

கரூரில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழா தொடர்பாக தொண்டர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதில், கொள்கையில்லாத கூட்டத்தை சேர்த்து கும்மாளம் போட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி திமுக இல்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து, கொள்கைப் பட்டாளமாகக் கூடியும் கூட்டம் முடிந்தப் பின்னர் லட்சிய வீரர்களாகச் செல்வோம் எனக் கூறினார். வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சார்-க்கு எதிராகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் எனவும் உறுதியுடன் தெரிவித்தார்.

பொருளாதாரத்தில் இரட்டை இலக்கத்திலான வளர்ச்சியும் மக்களின் நலன் காக்கு சிறந்த கட்டமைப்பும் இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும் தெரிவித்தார்.

இருவண்ணக் கொடியேந்தி கொள்கைக் குடும்பமாக கரூர் முப்பெரும் விழாவில் அணிதிரள வேண்டும் என முடிவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *