
பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாளையொட்டித் தமிழக பாஜக தலைவர் அவரை நினைவுகூர்ந்து போற்றியுள்ளார்.
கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்த சியாமா பிரசாத் முகர்ஜி அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படித்துத் தேர்ச்சிபெற்றுப் பாரிஸ்டர் பட்டம் பெற்றதையும், 33 வயதில் அவர் படித்த கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானதையும் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதி வழங்கிய 370ஆவது சட்டப்பிரிவை நீக்க சியாமா பிரசாத் விரும்பியதையும், காஷ்மீரை, இந்தியாவுடன் முழுமையாக இணைக்க வேண்டும் என்று கனவு கண்டதையும் குறிப்பிட்டுள்ளார்.
சியாமா பிரசாத்தின் கனவு, பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால், 2019ஆம் ஆண்டு நனவானதாகவும் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்
