Advertisements

விஜய்க்கு 15 சதவீத ஓட்டு: காத்திருக்கும் திருப்பம்
கடந்த காலங்களில் வெகு அதிகமாகப் பேசப்பட்டு வந்த தமிழக வெற்றி கழகத்தின் நிலைமை மோசமான விடையைச் சந்திக்கலாமெனத் திரை மறைவு ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது .முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவின் பேரில் நான்கு தனியார் அமைப்புகள் கடந்த ஒரு மாத காலமாகத் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஒரு ஆய்வறிக்கை தயார் செய்து அதனை முதலமைச்சர் கைவசம் ஒப்படைத்துள்ளது
இந்த ஆய்வறிக்கை என்பது கிராமத்து டீக்கடை பெஞ்சு திரையரங்க வாசல்கள் ஓட்டல்கள் கோவில்கள் போன்ற மக்கள் கூடும் பகுதிகளில் ரகசியமாக எடுக்கப்பட்டுள்ளது .இந்த ஆய்வின் முடிவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் 40 சதவீத வாக்குகள் திமுகவுக்கு கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அதிமுக பாஜக பாமக ஆகிவை கூட்டணி சேரும்பொழுது அவர்களுக்கு 35 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
எனவே திமுக கூட்டணிக்கு அதிமுக கூட்டணிக்கும் இடையில் தான் உண்மையான போட்டி நிலவுகிறது என்ற தகவலும் சொல்லப்பட்டுள்ளது
இதேபோல் புதிதாகக் கட்சி தொடங்கி இருக்கும் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்திற்கு 15 சதவீத வாக்குகள் மட்டுமேகிடைக்கும் இதன் மூலம் அவர் முதலமைச்சராவதற்கு கொஞ்சம் கூட வாய்ப்பில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது .மொத்தமுள்ள 234 தொகுதிகளில் சராசரியாக 200 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையில் இருக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின் .ஆனால் திமுகவை பொறுத்த வரையில் கிட்டத்தட்ட 100 தொகுதிகளில் மிகப் பலவீனமாக இருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தகவல் சொல்லப்பட்டுள்ளது . தற்போது தமிழ்நாடு அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் மகளிர் உதவித்தொகை திமுகவின் வெற்றிக்கு மிகப்பெரிய பலமாக இருப்பதாகவும் எனவே தேர்தல் வாக்குறுதியின்போது இதனை 2000 ரூபாயாக உயர்த்தி அறிவிக்கும்படியும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இதே சமயம் கூட்டணி கட்சிகள் பலம் ஒரு பக்கம் இருந்தாலும் மகளிர் உதவித் தொகையை 3000 ரூபாயாக உயர்த்துவதன் மூலம் வெற்றி பெற்று விடலாமென அதிமுக பக்கம் கணக்கு போட்டு இருக்கிறார்கள்.விஜயைப் பொறுத்த வரையில் மகளிர் உரிமைத்தொகை என்பது தற்போதைய நிலையே தொடரும் என்ற அறிவிப்பைத் தவிர வேறு புதிய அறிவிப்பு எதுவும் வெளியிடும் திட்டம் இல்லை இது தமிழக வெற்றி கழகத்திற்கு ஒரு வகையில் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது .கட்சித் தொண்டர்களைப் பொறுத்தவரையில் திமுக அதிமுக தமிழக வெற்றி கழகம் நாம் தமிழர் கட்சியென நான்கு கூட்டணிகளிலும் மிகத் தீவிரமாகப் பணியாற்றக் காத்திருக்கிறார்கள் அவர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகம் இருக்கிறது என்ற தகவலும் சொல்லப்பட்டு இருக்கிறது
திமுகவைப் பொறுத்த வரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைக் கூட்டணியாக வைத்துக் கொள்ள வேண்டும் தற்பொழுது அந்தக் கட்சிக்கு அதிகப்படியான ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் எனவே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைக் கூட்டணி வைத்துக் கொண்டால் மட்டுமே 40 சதவீத ஓட்டுகளை பெற முடியும் என்ற தகவலும் சொல்லப்பட்டு இருக்கிறது.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரிய நேரிட்டால் திமுகவுக்காக மிகப்பெரிய பலவீனமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். இதற்குக் காரணம் தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தலித்துகளும் தற்போது விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் அணியில் இருப்பதாகக் கணக்கிட்டு இருக்கிறார்கள்
இந்த ஆய்வில் நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய சரிவைச் சந்தித்து பத்து சதவீத வாக்குகளை மட்டுமே பெரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அதிமுக கூட்டணியில் இணைவதாக இருந்தால் திமுக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் எனவும் தற்பொழுது அவர் தனித்துப் போட்டியிடுவதால் திமுகவுக்கு எந்தவித ஆபத்து இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .இது தவிர திமுக தலைவர் மு க ஸ்டாலின் உத்தரவின் பெயரில் நடைபெறும் ஓரணியில் தமிழகம் என்ற திட்டம் மிக வேகமாகச் செயல்பட தொடங்கி இருக்கிறது எனவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
செய்தித்தொகுப்பு : போஸ்
Advertisements



